பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

புதல்வர் மதுராந்தகசோழர் என்பார் முடிசூடிக்கொண்டு அரசு புரிதற்கு ஏற்ற பருவத்தினராயில்லை. ஆதலால் இவரது தம்பியாகிய அரிஞ்சயனென்பவர் இவருக்குப்பின்னர் ஆட்சி புரியத்தொடங்கினர். அரிஞ்சயனும் அவரது புதல்வர் சுந்தரசோழருடம் அரசாண்ட பின்னர், மதுராந்தகசோழர் கி.பி.969-ல் முடிசூடிக்கொண்டு 16 வருடகாலம் ஆட்சிபுரிந்து கி.பி.985-ல் விண்ணுலகெய்தினர் என்ப.

மதுராந்தகசோழர் அவரது தாய்தந்தையராகிய செம்பியன்மா தேவியார், முதற்கண்டராதித்தர் என்ற மூவரது படிமங்களும் தஞ்சைஜில்லாவிலுள்ள கோனேரிராஜபுரம் சிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ளன.