பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 8


எத்துணையோ பலவாம்.[1] அவையொழிய எஞ்சியுள்ள தமிழ் நூற்களில் மிகப் பழமையானது தொல்காப்பியம் என்ற இலக்கன நூலேயாகும், இந்நூல் அகத்திய முனிவரது மாணாக்கரும், இடைச் சங்கப்புலவருள் ஒருவருமாகிய ஆசிரியர் தொல் காப்பியனாரால் இயற்றப்பெற்றது: நிலந்தருதிருவிற் பாண்டியன் அவைக்களத்தில் அரங்கேற்றப்பெற்றது இடைச்சங்கத்தார்க்கும். கடைச்சங்கத் தார்க்கும் இலக்கண நூலாக அமையப்பெற்றது. இத்தகைய அருமை வாய்ந்த பழைய நூலில் முற்காலத்தில் தமிழ் மக்களுள் காணப்பட்ட குல வேறுபாடுகள் இனிது கூறப் பட்டுள்ளன. அதனை யாராயுங்கால், பார்ப்பார், அரசர், வணிகர், வேளாளர் என்ற நான்கு வகுப்பினரும் பழைய நாளில் நம் தமிழகத்தில் வாழ்ந்து வந்தனரென்பது மரபியலாற் பெறப்படுகின்றது. அன்றியும். ஆசிரியர் தொல்காப்பியனார் அகத்திணையியலில் கருப்பொருளின் பாகுபாடாகிய மக்கள் திறம் உணர்த்துமிடத்து நிலம்பற்றி வாழும் ஐந்திணை மாக்கள் இருந்தமை கூறுகின்றார். அன்னோர் குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்து வகை நிலங்களிலும், முறையே வாழ்ந்த குறவர், ஆயர், உழவர். வேட்டுவர், பரதவர் என்போர். அவர்களேயன்றிக் குற்றேவன்மாக்களும் தொழிலாளரும் இருந்தனரென்பது அகத்திணையியலிலுள்ள 'அடியோர் பாங்கிலும் வினைவலர் பாங்கினும்[2] என்ற சூத்திரத்தால் அறியக்கிடக்கின்றது. இதுகாறுங் கூறியபலவகைப் பிரிவினருள் பார்ப்பார், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நான்கு வகுப்பினரும் எல்லா நிலங்கட்கும் உரியவராய் அக்காலத்தில் விளங்கிய மக்கள் ஆவர். குறவர், ஆயர், உழவர், வேட்டுவர், பரதவர் ஆகிய ஐந்திணை மக்கள் அவ்வந்நிலத்திற்கே உரியவராய் நிலம்பற்றி வாழ்ந்த மக்கள் ஆவார். குற்றேவன் மாக்களும் தொழிலாளரும் ஐந்திணை மாக்களை அடுத்தவராக அக்காலத்தே கருதப் பட்டுள்ளன ரென்பது மேற்கூறிய 'அடியோர் பாங்கினும் வினைவலர்


  1. ஏரணம் உருவம் போகம்இசைகணக் கிரதஞ் சாலம் தாரண மரமே சந்தந் தம்பநீர்நிலம் உலோகம்
    ஆரணம் பொருளென் றின்ன மானநூல் பலவும் வாரி
    வாரணங் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரு மாள.

  2. தொல் - பொருளதிகாரம், அகத்திணையியல், சூத்-25.