பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

41


பாங்கினும்' என்ற அகத் திணையியற் சூத்திரத்தால் அறியப்படுகின்றது. ஈண்டுத் தோழிலாளர் எனப் பட்டோர் மேற்கூறப் பெற்றவர் தம் வாழ்க்கையை நடாத்துதற்கு இன்றியமையாதவர்களாயுள்ளவர்கள். மேற்கூறிய எல்லோருக்கும் தலைவராய் எல்லா நிலங்களையும் ஆட்சிபுரிந்தோர் அவர்களுள் ஒரு வகுப்பினராகிய அரசர் ஆவர். குறிஞ்சி, முல்லை,முதலான ஐவகை நிலங்கட்கும் குறவர், ஆயர் முதலான அவ்வந்நில மக்களுள்ளும் தலைவராயினார்: உளர்; அன்னோர் குறும் பொறைநாடன். அண்ணல். ஊரன், மீளி, சேர்ப்பன் என்று அழைக்கப்பெற்றுள்ளனர். அவர்கள் அவ்வந்நிலங்கட்குத் தலைவராயினும் எல்லா நிலங்கட்கும் மக்கட்கும் தலைமை பூண்டு விளங்கிய நெடுமுடி வேந்தர்க்குக்கீழ் வாழ்ந்து வந்தனர்.

இனி, அக்காலத்தே அறிவர், தாபதர், பரத்தையர் என்போரும் சிறப்புற்று விளங்கினவராவர். அவர்களுள் அறிவர் எனப்படுவார் முக்காலங்களுமுணர்ந்து எல்லாவுயிரிடத்தும் செந்தண்மை பூண்டு பேரறிஞராய் நிலவிய நிறைமொழி மாந்தர். அறிவரே அந்தணரென்று கூறப்பெற்றோர். அவர் ஆணையிற் கூறியன வெல்லாம் மறையெனவும் மந்திரமெனவும் சொல்லப்படும் தாபதர் என்போர் தவவேட முடையராய் விரதவொழுக்கம் மேற்கொண்டவராவர். பார்ப்பாருள் அறிவரும் தாபதரும் ஆயினார் உளார். ஆனால் அறிவரெல்லோரும் பார்ப்பனரல்லர்: அன்றியும் தாபதரெல்லோரும் பார்ப்பாருமல்லர். எனவே, அறிவரும் தாபதரும் ஒரே குலத்தைச் சேர்ந்தவரல்லர். பரத்தையர் காதற்பரத்தையரும் காமக்கிழத்தியருமென இருவகைப்பிரிவினராய் வாழ்ந்த வரைவின்மகளிராவர்.

இதுகாறும் யாம் கூறிய வகுப்பினர்களே முன்னர் தமிழ் நாட்டில் வசித்த பழந்தமிழ்க் குடிகளாவார். அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் ஆகிய நன்கு வகுப்பினரும் அகநகர்க் கண்ணும் ஐந்திணைமக்கள் குறிஞ்சி, முல்லை முதலிய நிலங்களிலுள்ள சிற்றூரின்கண்ணும் வசித்து வந்தனர். தொழிலாளரும் குற்றேவன்மாக்களும் புறநகர்க்கண் சேரிகளில் வசித்தனர். பரத்தையயர் அகநகரில் வாழ்ந்துவந்தனர். அறிவரும் தாபதரும் யாண்டும் வசித்தற்குரியர். ஆனால் வடுகர் முதலான தமிழரல்லாத