பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 8


தொண்டை நாடு, கொங்குநாடு, திருமுனைப் பாடிநாடு முதலியவற்றால் தெளியப்படும். அங்ஙனம், உரையாசிரியர்களால் விதந்தோதப் படாத பலநாடுகளுள் மழநாடும் ஒன்றாயிருத்தல் வேண்டும். அன்றியும், தமிழகம் சேரநாடு, பாண்டிநாடு, சோழநாடு என்ற மூன்று பெரும் பிரிவுகளை யுடையதாயிருந்ததென்பது,

“வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பில்
நாற்பெய ரெல்லை யகத்தவர் வழங்கும்
யாப்பின் வழிய தென்மனார் புலவர்“[1]

என்ற தொல்காப்பியச் செய்யுளியற் சூத்திரத்தால் நன்கறியக் கிடக்கின்றது. இம்மூன்று பெரும்பிரிவுகளும் பல உள்நாடுகளையுடையன வாயிருந்தனவென்பது பழைய தமிழ் நூற்களையும் கல்வெட்டுக் களையும் ஆராய்வார்க்கு இனிது புலப்படும்[2]. ஆகவே, இம்மூன்று பெரும்பிரிவுகளுள் அடங்கியுள்ள பல உள்நாடுகளில் மழநாடும் ஒன்றாயிருத்தல் வேண்டும்.

தாயவன் யாவுக்குந் தாள்சடை மேற்றனித்திங்கள் வைத்த தூயவன் பாதந் தொடர்ந்துதொல் சீர்துளை யாற்பரவும் வேயவன் மேன்மழ நாட்டுவிரிபுனன் மங்கலக்கோ னாயவ னானாய னென்னை யுவந்தாண் டருளினனே[3]

என்ற நம்பியாண்டார் நம்பிகளது திருவாக்கினாலும் உறுதி செய்கின்றது. இதற்கேற்ப ஆசிரியர் சேக்கிழார், திருஞான சம்பந்த


  1. தொல்காப்பியம் பொருளதிகாரம் செய்யுளியல் சூத்திரம் – 1.
  2. சோழநாட்டில் பல உண்ணாடுகள்உளவென்பதை அடியிற் குறித்துள்ளவற்றால் அறிக.

    “அகன்பாணைநீர் நன்னாட்டு மேற்காநாட்டாதனூர்”
    பெரியபுராணம். திருநாளைப்போவார். 1

    “தள்ளும் பொன்னி நீர்நாட்டு மருகநாட்டுத் தஞ்சாவூர்”
    பெ.பு.செருத்துணையார். 1.

    “நீதிவழுவா நெறியினராய் நிலவுங் குடியானெடுநிலத்து
    மீதுவிளங்குந் தொன்மையது மிழலைநாட்டுப் பெருமிழலை“

    பெ.பு. பெருமிழலைக்குறும்பர் - 1.

    “செழுந்தளிரின் புடைமறைந்த பெடைகளிப்பத் தேமாவின்
    கொழுந்துணர் கோதிக்கொண்டு குயினாடு கோனாடு“

    பெ.பு.இடங்கழியார் -1.

  3. திருத்தொண்டர் திருவந்தாதி - 15.