பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

51


கொள்ளப்படவே, பல்லவர்களும் குறு நில மன்னர் ஆயினர். தொண்டைமண்டலமும் சயங்கொண்ட சோழமண்டலம் என்னும் புதியதோர் பெயரைப்பெற்றது. அந்நாளில் சோழ மன்னர்களுக்கு திறைசெலுத்திவந்த பல்லவர்குலச் சிற்றரசர்களும் தலைவர்களும் தொண்டை மண்டலத்தில் பலபகுதிகளில் வசித்து வந்தனர். அவர்களுள் பெரும்பாலோர் சோழ மன்னர்களின் அமைச்சர்களாகவும் படைத்தலைவர்களாகவும் நிலவிய தோடு சில உண்ணாடுகளையும் தனியூர்களையும் ஆட்சிபுரியும் உரிமையும் பெற்றிருந்தனர். இங்ஙனம் வாழ்ந்து வந்த பல்லவ குலச் சிற்றரசர்களுள் சம்புவராயர் என்ற பட்டப் பெயருடன் விளங்கியவர்களும் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்தனர் என்பதும் தெரிகிறது. இவர்களது ஆட்சிக்குட்பட்ட நிலப்பகுதி செங்கற்பட்டு, வடஆற்காடு ஜில்லாக்களைக் கொண்டுள்ளதாயிருந்தது. இவர்கள் சோழ மன்னர்களுக்கு திறை செலுத்தினர். கல்வெட்டுக்களால் அறியப்படும் சம்புவராய மன்னர்களுள் செங்கேணி மிண்டன் அத்திமல்லன் சம்புவராயன் என்பவனே மிகப் பழமையானவன். இவன் மூன்றாம் குலோத்துங்க சோழனது ஆட்சியின் 8- ஆம் ஆண்டில் (கி.பி.1186) திருவல்லமுடைய மகாதேவர்க்குக் குற்றத் தண்டம், திரிசூலக்காசு இவற்றால் கிடைக்கும் வருவாய்களைக் கொடுத்தனன் என்று ஒரு கல்வெட்டுக் கூறுகின்றது. (South Indian Inscrieions VOI.111 No.60) இக்கல்வெட்டின் இறுதியில் சங்கேணிகள் வம்சம் உள்ளவரைக்கும் இத்தர்மத்தைச் செய்யாமல் நிறுத்துவோர் கங்கைக் கரையிலும் குமரிக் கரையிலும் குரால் பசுவைக் கொன்றவனது பாவத்தையடைவர் என்று வரையப் பட்டுள்ளது. இதனால் செங்கேணி என்பது குடிப்பெயர் என்று வெளியாகிறது.

மூன்றாம் குலோத்துங்கனது ஆட்சியின் 11- ஆம் ஆண்டில் (கி.பி. 1189) செங்கேணி அம்மையப்பன் கண்ணுடைய பெருமானான விக்கிரமசோழச் சம்புவராயன் பலவரிகளால் கிடைக்கும் வருவாய்களைத் திருவல்லமுடையார்க்கு அளித்தனன். (S.I.I.Vol. III No. 61) முன்னவனுக்குப் பின்னவன் யாது முறையுடையான் என்பது இப்போது புலப்படவில்லை. ‘சோழச்சம்புவராயன்‘