பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 8


அறியப்பெற்றதாகும். முதல் ஆதித்தசோழன் ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பல்லவர்களைப் போரில் வென்று சோழமண்டலத்தையும் தொண்டைமண்டலத்தையும் கைப்பற்றினான். பின்னர், பல்லவர்களுள் சிலர் சோழ மன்னர்க்குத் திறை செலுத்தும் குறுநில மன்னர் ஆயினர்; சிலர் அவர்கள்பால் அமைச்சர், படைத்தலைவர், திருமந்திர ஓலை முதலான அரசியல் அதிகாரிகளாகவும் வாழ்ந்து வந்தனர்; இங்ஙனம் வாழ்ந்துவந்த பல்லவ குலத் தலைவர்களுள் அறந்தாங்கித் தொண்டைமானும் ஒருவன் ஆவான். இத் தொண்டைமான் மரபினர் அறந்தாங்கி அரசு எனவும் வணங்காமுடித் தொண்டைமான் எனவும் அறந்தாங்கியில் புகழுடன் வாழ்ந்துவந்த செய்தி பல கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது. இன்னோரது வரலாற்றைத் தொடர்பாக அறிந்து கோடற்குரிய சான்றுகள் இந்நாளில் கிடைத்தில. ஆயினும், கிடைத்துள்ள ஆதாரங்களைக் கொண்டு ஒருவாறு ஆராய்ந்து முடிவு காண்பாம்.

புதுக்கோட்டைக்கு வடகிழக்கிலுள்ள வேசிங்கி நாட்டில் வளத்து வாழவிட்ட பெருமாள் தொண்டைமான் என்பவன் கி.பி.1201 இல் இருந்தனன் என்று தெரிகிறது. இவனே, அறந்தாங்கித் தொண்டைமான்களுள் மிகத் தொன்மை வாய்ந்தவன். எனவே, கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இக்குடியினர் தம் ஆட்சியை அங்கு நிறுவி யிருத்தல் வேண்டும். இவனுக்குப் பின்னர் ஆட்சிபுரிந்தவர் யாவர் என்பது புலப்படவில்லை.

கி.பி.1426 முதல் 1443 வரையில் குலசேகர தொண்டைமானும். கி.பி.1443 இல் சூரியதேவர் சுந்தரபாண்டியத் தொண்டைமானும் கி.பி.1444 முதல் 1453 வரையில் அழகிய மணவாளப் பெருமாள் தொண்டைமானும் அரசாண்டனர். இவர்களைப் பற்றிய வரலாறு தெரியவில்லை. இவர்கள் மூவரும் உடன் பிறந்தவர்களாக இருத்தல் கூடும் என்று கல்வெட்டுத்துறை (இலாக்கா) ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். அழகிய மணவாளப் பெருமாள் தொண்டைமானுக்கு இலக்கணத் தண்ணாயகத் தொண்டைமான் என்ற புதல்வன் ஒருவன் இருந்தனன். 1.இவனுக்குப் பின்னர்த் திருநெல்வேலிப் பெருமாள்