பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

61


தொண்டை மானும் 2 ஏகப்பெருமாள் தொண்டைமானும் ஆட்சி புரிந்தனர்.

இவர்களுள் ஏகப்பெருமாள் தொண்டைமான் கி.பி.1481 முதல் 1499 வரையில் அரசாண்டான். இவன் கல்வெட்டுக்கள் புதுக்கோட்டை நாட்டில் பழங்கரை, வாளவர் மாணிக்கம், கோவிலூர் முதலான ஊர்களில் காணப்படுகின்றன. இவ்வேந்தனுக்கு மூன்று புதல்வர் இருந்தனர். அன்னோர் தீராத வினை தீர்த்தான் தொண்டைமான் 3. ஆவுடைநயினார் தொண்டைமான் 4. பொன்னம்பல நாத தொண்டைமான் என்போர்.

இவர்களுள், பொன்னம்பலநாத தொண்டைமான் கி.பி. 1514 முதல்1569 வரை ஆட்சிபுரிந்தான். இவன் கல்வெட்டுக்கள் புதுக் கோட்டை நாட்டிலும் இராமநாதபுரம் சில்லாவிலும் காணப் படுகின்றன. எனவே, இவனது நாடு மிகப்பெருகி இக்காலத்திலுள்ள புதுக்கோட்டை நாட்டின் ஒரு பகுதியையும், இராம நாதபுரம் சில்லாவின் ஒரு பகுதியையும், தஞ்சாவூர் சில்லாவிலுள்ள அறந்தாங்கித் தாலூகாவையும் தன்னகத்து கொண்டு விளங்கிற்று என்று கூறலாம். இவன் சிறந்த சிவ பத்தியுடையவன். இவன் வாழ்ந்து வந்த நாளில் தண் பெயரால் அலை விலஞ்சாதரன் சந்தி, தொண்டைமான் சந்தி என்று கட்டளைகள் அமைத்து அவற்றிற்கு நிபந்தங்களும் விட்டுள்ளான். இவன் ஈழ மண்டலத்தின்மீது படையெடுத்துச் சென்று, அதனை வென்று திறைகொண்ட வீரச் செயல் பாராட்டத்தக்கது. இவ்வரிய செயலையும் இவன் ஏழு நாட்களில் செய்து முடித்தனன் என்பது ஈண்டு அறியத்தக்க தொன்றாகும்.

ஈழநாட்டு மன்னன் விசயநகர வேந்தனாகிய கிருஷ்ண தேவராயனுக்குத் திறை செலுத்தி வந்தான். அவன் ஒரு முறை அதனைக் குறித்த காலத்திற் செலுத்தாமை பற்றி, அவ்வேந்தற்காகப் பொன்னம்பலநாத தொண்டைமான் இலங்கைமீது படையெடுத்துச் சென்று, அதனை ஏழு நாட்களில் வென்றனன் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.

இவன் ஐம்பத்தைந்து ஆண்டுகள் ஆட்சிபுரிந்துள்ளமையின், இவனது வாழ்நாளில் பல நிகழ்ச்சிகள் நிகழ்ந்திருத்தல்