பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 8


காலம்:- முதல் குலோத்துங்க சோழதேவரது 1 ஆம் ஆண்டு.

இடம்:- கர்ப்பகிரகத்தின் தென்புறம் கீழ்ப்பாகம் I

ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு - வது உலகுய்ய வந்த சோழவளநாட்டு அண்டாட்டுக் கூற்றத்து திருப்புறம்பியமுடைய மஹதே......... பங்குனித் திருநாளும் திருவேட்டையும் திருத்தாமம் பிரசாதித்தும் அமுதுசெய் II தருளி அடியாற்கு வழக்கத்துக்கும் திருவமுதரிசிருள கலனே நாழி உருக்கி நெல் இரு தூணி குறுமணியும் கறியமுது நெய்யமுது தயிரமுதுக்கும் உள குறுணிநாழி கும் திருவமுதுக்குமாக ஸ்ரீ பராந்தக சதுர்வேதி மங்கலத்துத் தென்பிடாகை II திருவெள்ளறை நல்லூர் வெள்ளாளர் அரிவாள் தாயனும் சிறுத் தொண்டரும் உள்ளிட்டஊரார் திருத்து கொல்லையுட்பட நிலம் நாலுமாவுக்கும் கொல்லை..... காக உட்பட இறுக்கு நெல் கலனேம் இறுத்து மிகுதியால் உள்ளித்......IV..... நிவந்தஞ் செலுத்தவேணும் ஸ்ரீ ஜெயங்கொண்ட சோழ புரத்திருக்க வாணாதிராஜர் விண்ணப்பஞ் செய்ய இப்பரிசு இத்திநம் செய்கைக்குக் கல்லிலும் செம்பிலும் வெட்டுக என்று திருவாய்மொழிந்தருள திருமுகப்படி கல்லுவெட்டி....

(3)

காலம்:-முதல் இராஜராஜசோழனது பத்தாம் ஆண்டு
இடம்:-கர்ப்பக் கிரகத்தின் தென்புறம்.

1. ஸ்வஸ்ஸ்ரீதிருமகள் போலப் பெருநிலச் செல்வியும் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக்கல மறுத்தருளி கங்கைபாடியும் நுளம்பப்பாடியும் தடிகைப்பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமுந்திண்டிறல் வென்றித் தன் (2)டாற்கொண்ட தன்னெழில் வளரூழியில் யெல்லா யாண்டுந் தொழுதகை விளங்கும் யாண்டே செழியரைத்தேசு கொள்கோ இராஜகேசரி வம்மற்கு யாண்டு பத்தாவது வடகரை அண்டாட்டுக் கூற்றத்து திருப்புறம்பியத் தாடியானாகிற(3) கூத்தபெருமாளுடைய நம்பிராட்டியார் திருப்பள்ளிக் கட்டிலுக்கு