பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

67


இவ்வூர் வளஞ்சியர் வைத்த திருநொந்தா விளக்கு இவைபற்றுக்கு பழையவாநவன்மாதேவி நிலம் வானவன் மாதேவி நதிக்கு கிழக்கு ராஜேந்திரிவாய்க்காலுக்கு மேற்குநின்று (4)சம்மதித்து கையோலை செய்துகொடுத்தோம். தேவகன்மி களேம் இவை கோயில் கணக்கு புறம்பியம் உடையான் பிரளயன் புறம்பியன் எழுத்து. இது மஹேசுரசாட்சி.

(4)

காலம்:- முதல் இராஜராஜசோழனது பத்தாம் ஆண்டு

இடம்:-கர்ப்பக் கிரகத்தின் தென்புறம்.

ஸ்வஸ்திஸ்ரீ கோவிராஜகேசரிவம்மற்கு யாண்டு பத்தாவது அண்டாட்டுக் கூற்றத்து நீங்கிய தேவதானம் திருப்புறம்பியத்து பட்டாலகற்குப் பல்லவப் பேரரரையன் வீரசிகாமணிப் பல்லவரையன் சந்திராதித்தவல்லெரிக்க வைத்த நொந்தா விளக்கு ஒன்று நிக்கு நிசதம் உழக்கு நெய்க்குவைத்த சாவா மூவாப் பேராடு தொண்ணூறும் பன்மா ஹேஸ்வரரக்ஷை.

(5)

காலம்:- முதல் இராஜராஜசோழனது ஏழாம் ஆண்டு
இடம்:- முன்னர் வரைந்துள்ள கல்வெட்டிற்குக் கீழ்.

ஸ்வஸ்திஸ்ரீ கோவிராஜகேசரிவம்மற்கு யாண்டு எஆவது திருப்புறம்பிய பட்டாலகற்கு இருமுடிசோழ அணுக்கரில் ராசமாநாயகன் இத்தேவற்கு சந்திராதித்தவல் எரிக்க வைத்த திருநொந்தா விளக்கு ஒன்றுனிக்கு னிசதம் உழக்கு நெய்யாக வைத்த ஆடு தொண்ணுறு.

(6)

காலம்:-முதல் இராஜராஜசோழனது ஐந்தாம் ஆண்டு

இடம்:-கர்ப்பக் கிரகத்தின் தென்புறம்.

(1)ஸ்வஸ்திஸ்ரீ கோவிராஜகேசரிவம்மற்கு யாண்டு ரு ஆவது வடகரை அண்டாட்டுக் கூற்றத்து நின்று நீங்கிய தேவ தானந் திருப்புறம்பியம் வானவன் மூவேந்த வேளான் ஆராதித்த