பக்கம்:தி மு க திறந்த புத்தகம்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 வகுப்பில், 2004-2005ல் இரண்டாம் வகுப்பில், 2005-2006ல் மூன்றாம் வகுப்பில், 2006-2007ல் நான்காம் வகுப்பில் மற்றும் 2007-2008ல் ஐந்தாம் வகுப்பில் என்று படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும்.” ஜெயலலிதா அரசு ஏப்ரல் 2003இல் பிறப்பித்த அரசாணையில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை அறிவியல் தமிழ் என்ற பாடத்தைக் கற்பிக்க ஆணையிடப் படுகிறது என்று தெரிவித்த போதிலும், 2003-2004ஆம் கல்வியாண்டில் முதலாம் வகுப்பிற்கு மட்டுமே நடைமுறைப் படுத்தப்படும், அதற்கடுத்த வகுப்புகளுக்கு படிப்படியாக ஒவ்வொரு ஆண்டாக நடைமுறைப்படுத்தப்படும் என்றுதான் அரசாணை தெரிவிக்கின்றது. எனவே இந்தக் கல்வியாண்டில் முதல் வகுப்பிற்கு மட்டுமே இந்த அரசாணை செல்லும். ம அதுவும் பள்ளிகள் திறந்து பல மாதங்கள் ஆகியும் இதுநாள்வரை1ஆம்வகுப்புக்கு அறிவியல் தமிழ் தொடங்கப் பட்டதாகவோ, அதற்கானபுத்தகங்கள் வழங்கப்பட்டதாகவோ தெரியவில்லை. அது மாத்திரமல்ல; வேடிக்கை என்னவென்றால் இந்த ஆண்டு விடுதலை நாளில் தலைமைச் செயலகக் கோட்டையிலே கொடியேற்றி முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய உரையிலே என்ன சொன்னார் தெரியுமா ? "2003-2004 கல்வி ஆண்டு முதல் அனைத்து வகைப் பள்ளிகளிலும், 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை படிப்படியாக அறிவியல் தமிழ் என்னும் பாடத்தைக் கற்பிக்க ஏற்கனவே எனது அரசு, ஆணை பிறப்பித்துள்ளது” என்று கூறிவிட்டு, ஆனால் அதற்கு மாறாக ஜெயலலிதாவே அதே