பக்கம்:தி மு க திறந்த புத்தகம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 பெற்ற பள்ளிகள்) முதல் மொழியாக தமிழ் அல்லது தாய்மொழி இருக்கும். (3) மெட்ரிகுலேஷன் மற்றும் மாநில அரசுப் பள்ளிகளில் பயிற்று மொழியாக தமிழ் அல்லது தாய்மொழி இருக்கும். (4) 2000-2001 முதல் மூன்றாண்டு காலத்திற்குள் தமிழ் அல்லது தாய்மொழி பயிற்று மொழி என்பது முடிவடைய வேண்டும். தி.மு. கழக ஆட்சிக் காலத்தில் 27-12-1999 அன்று பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண். 354இன்படி, 24-1-1968 அன்று பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண். 105இல் உள்ள வட்டார மொழி அல்லது தாய்மொழி என்ற வார்த்தைகள் தமிழ் அல்லது தாய்மொழி என்று திருத்தப்பட்டது. அதே 27-12-1999 அன்று பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண். 355இன்படி, மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை தமிழ் அல்லது தாய்மொழி பயிற்று மொழியாக இருக்கும். 6ஆம் வகுப்பு முதல்; தமிழ், தாய்மொழி அல்லது ஆங்கிலம் பயிற்று மொழியாக இருக்கும். 27-1-2000 அன்று அரசாங்கம்; 7-6-1999 அன்று சென்னை உயர்நீதி மன்றம்; தமிழை தாய்மொழியாகக் கொண்டிராத மாணவர்களுக்கு ஆதரவாக பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையில்; 13-1-1999 அன்று வெளியிட்ட அரசாணைக்கு ஒரு திருத்தம் வெளியிட்ட டது. அதிலே பயிற்று மொழியாக தமிழ் அல்லது தாய்மொழி என்று இருக்கலாம் என்று கூறியது. நீதிபதி மோகன் அவர்களின் பரிந்துரைகளின் பேரில் அரசாங்கம் 19-11-1999ஆம் தேதி பிறப்பித்த அரசாணை