பக்கம்:தி மு க திறந்த புத்தகம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 324ஐ எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பல்வேறு சங்கத்தினர் ரிட் மனுக்களை முதல் பெஞ்சில் தாக்கல் செய்தார்கள். உயர்நீதிமன்றத்தின் முழு பெஞ்ச் ரிட் மனுக்களை ஏற்றுக் கொண்டு அரசாணையை ரத்து செய்தது. தீர்ப்பில் கல்வி கற்பது என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்று என்றும், பயிற்று மொழியைத் தேர்ந்தெடுப்பதும் அதிலே அடங்கும் என்றும், பிள்ளைகளுக்காக அதனைத் தேர்ந்தெடுக்கு உரிமை பெற்றோர்களுக்கு உண்டு என்றும் நீதிபதிகள் தெரிவித்தார்கள். உயர்நீதிமன்ற முழு பெஞ்சின் தீர்ப்புக்கு எதிராக தி.மு.கழக ஆட்சியில் தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டு, அங்கே விசாரணையிலே இருந்தபோதே; பொதுத்தேர்தலில் இங்கு ஆட்சிமாற்றம் ஏற்பட்டுவிட்டது. எனவே இந்த வழக்கில் ஒரு நல்ல தீர்ப்பினைப் பெறுவதற்கு தற்போதுள்ள அ.தி.மு.க. அரசு விரைந்து செயல்படவேண்டியது முக்கியமான ஒன்றாகும் என்பதுடன், தடைக்கற்களைத் தாண்டி தமிழ் வளர்ப்பது நமது தலையாய கடமையாகும் என நினைவூட்டுகிறேன். டிசம்பர் 1ஆம் தேதி மத்திய, மாநில அரசு அலுவலகங்களின் முன்னால் நாம் நடத்தவிருக்கும் மறியல் அறப்போர் குறித்த விளக்கப் பொதுக் கூட்டங்களில் எடுத்து வைக்க வேண்டிய கோரிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். “முரசொலி” 26.10.2003 அன்புள்ள, மு.க. per-tt-er damene