பக்கம்:தி மு க திறந்த புத்தகம்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 ஏற்கும். அதன்பின் அனைத்து இந்தியப் பல்கலைக் கழகங்களிலும் தமிழ்த் துறை தனித் துறைகளாக உருவாகும். தமிழ் மொழி, தமிழக கலை, இலக்கிய ஆய்வுகள் முனைப்பாக நடைபெறும். இந்தியப் பல்கலைக் கழக மானியக் குழு தமிழை செம்மொழியாக ஏற்றால், உலகப் பல்கலைக் கழகங்கள் அனைத்தும் அதை ஏற்கும். தமிழ் மொழிக்கும் தமிழர்க்கும் உலக அளவில் தன்மதிப்பு உயரும். - தமிழ் பன்னாட்டு மொழிக் கலைக் களஞ்சியங்களில் இலக்கியங்கள், கட்டுரைகள், வரலாறு, பண்பாட்டுக் கருத்துகள் இடம் பெறும். பல்கலைக் கழகங்களில் தற்போது தமிழ் மொழி கீழ்த்திசை மொழி என்று இந்நிலைமாறி கருதப்படுகிறது. இந்தியப் பல்கலைக் கழகங்களிலும், உலகப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் மொழிக்குத் தனி இருக்கை நிறுவப்பெறும். அத்துறைகள் தனித்தன்மையுடன் செயற்பட வாய்ப்பு ஏற்படும். சமஸ்கிருதத்திற்கு இந்திய அரசு, நேரடியாக 40 கோடி ரூபாயும், அரசு சார்பு நிறுவனங்கள் வாயிலாக 100 கோடி ரூபாயும் ஒதுக்கி, அந்த மொழியின் வளர்ச்சிக்கு உதவி வருவது போல் தமிழ் மொழி வளர்ச்சிக்கும் உதவி கிடைக்க வாய்ப்பு ஏற்படும். தமிழ்நாட்டிலும், இந்திய நாட்டிலும் பரந்து விரிந்து கிடக்கும் கல்வெட்டாய்வு, ஒலைச்சுவடி ஆய்வுகள் சமஸ்கிருதத்தை மையப்படுத்தியே ஆராயப்படுகின்றன. இந்த