பக்கம்:தி மு க திறந்த புத்தகம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 1995 வரை ஐந்துமுறை நீட்டிக்கப்பட்டது. பொடா சட்டத்தை நாடாளுமன்றத்தில் தற்போது கொண்டுவந்த பா.ஜ.க. 1994இல் தடா சட்டத்திற்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானம் வருமாறு:- "The Act granted power to the executives that were bound to be misused. Political parties have been tar- geted by the States, which have tended to misuse the law" (இந்தச் சட்டம், நிர்வாகத்திற்கு அதிக அதிகாரங்களை வழங்குகிறது. அவைகள் முறைகேடாகப் பயன்படுத்த வழிவகுக்கின்றது. அரசியல் கட்சிகள் மாநில அரசுகளால் குறி வைக்கப்படுகின்றன. மாநிலங்கள் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்த தூண்டப்படுகின்றன) பயங்கரவாதத்தை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு வரப்பட்ட தடா சட்டம் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்ட காரணத்தால் 1994 வரை 76 ஆயிரம் பேர் பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையிலே அடைக்கப்பட்டார்கள். இதில் ஒரு சதவிகித வழக்குகளில் கூட, குற்றம் நிரூபிக்கப் படவில்லை. குஜராத் மாநிலத்தில் மட்டும் இச்சட்டத்தின்கீழ் 18,584 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, தண்டிக்கப்பட்டவர்கள் 174 பேர் மட்டுமே! குற்றங்கள் நிரூபிக்கப்படாதவரை ஒருவர் நிரபராதியே என்ற குற்றவியல் கோட்பாடு பொடாவிற்குப் பொருந்தாது. தன்னை நிரபராதி என்று நிரூபிப்பதற்கு கால அவகாசம் தர மறுக்கின்றது இந்தச் சட்டம். பயங்கரவ நடவடிக்கைகள் நடக்கப்போவதாகத் தகவல் தெரிந்த ஒருவர் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கவேண்டும் என்பது இச்சட்டப்படி கட்டாயமாகும். ஒரு பத்திரிகையாளர் தனது பத்திரிகைக்காக சேகரிக்கும் தகவலை, காவல்துறையிடம் தெரிவிக்காவிட்டால் பத்திரிகையாளரும் ஒரு பயங்கரவாதியாகக் கருதப்பட்டு கைது செய்யப்படுவார்.