பக்கம்:தி மு க திறந்த புத்தகம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பிரதமர் வாஜ்பய் அவர்களுக்கும், துணைப்பிரதமர் அத்வானி அவர்களுக்கும் நான் இந்தச் சட்டம் திரும்பப் பெறப்பட வேண்டுமென்று கடிதம் எழுதியிருக்கிறேன். அனைத்துக் கட்சித் தலைவர்களும் கடந்த ஏப்ரல் திங்கள் துவக்கத்தில் கலந்துபேசி தீர்மானம் நிறைவேற்றி அதனை துணைப் பிரதமருக்கு அனுப்பியிருக்கிறோம். அதற்கு திரு. அத்வானி அவர்கள் 7-4-2003 அன்று எனக்கு எழுதிய பதில் கடிதத்தில், பொடா சட்டத்தை மாநிலங்கள் தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதற்காக ஆய்வுக் குழு அமைத்திருப்பதை நினைவூட்டியிருந்தார். தற்போது அவர்களே அந்தக்குழுவிற்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதை உணர்ந்து கொண்டு, குழுவிற்கு மேலும் அதிகாரம் அளிக்கக் கூடிய வகையில் திருத்தம் கொண்டு வந்துள்ளனர். எது எப்படியிருந்தபோதிலும், பொடா சட்டம் மத்திய அரசினால் திரும்பப் பெறவேண்டும் என்பதே என்பதே நமது கோரிக்கை. தமிழகத்திலே அந்தச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி சிறையிலே அடைக்கப்பட்டுள்ள தம்பி வைகோ, பழ. நெடுமாறன், நக்கீரன் கோபால் போன்றவர்கள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும். அடுத்து, தமிழக அரசின் சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள எஸ்மா, டெஸ்மா சட்டம். தொழிலாளர்களையும், அரசு அலுவலர்களையும் அடக்குமுறைக் கொடுமையால் கட்டுப் படுத்துவதற்காகவே கொண்டு வரப்பட்ட சட்டம் இது. அதிலும் குறிப்பாக எஸ்மா சட்டத்திற்கும், டெஸ்மா சட்டத்திற்கும் உள்ள முக்கிய வேறுபாடே, எஸ்மாசட்டத்தின் கீழ் விசாரணை இல்லாமல் ஒரு தொழிலாளரை டிஸ்மிஸ் செய்வதற்கு அதிகாரம் கிடையாது. விசாரணையே இல்லாமல் டிஸ்மிஸ் செய்வதற்கான அதிகாரம் சேர்க்கப்பட்டதுதான் டெஸ்மா. அதுமட்டுமல்ல; இந்த டெஸ்மா சட்டம் முன்தேதியிட்டு அவசரச் சட்டமாகப் பிறப்பிக்கப்பட்டது.