பக்கம்:தி மு க திறந்த புத்தகம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 பேச்சாளர்களுக்கு இவை பெரிதும் படுத்திடவும் பயன்படுமென்று நம்புகிறேன். - மாநாட்டில் தலைமைக் கழக உயர்நிலைச் செயல் திட்டக் குழுவிலே எடுத்த முடிவுக்கேற்பவும் - குழுமியிருந்த லட்சக்கணக்கான தமிழ்ப் பெருமக்கள் முன்னிலையில் அறிவித்து அவர்களின் ஒப்புதலைப் பெற்றதற்கேற்பவும் என் உயிரினுமினிய உன் போன்ற உடன்பிறப்புகள் உறுதி படைத்த நெஞ்சினராய் கை உயர்த்திக் காட்டி - களங்காணத் தயார் எனக் கர்ச்சனை புரிந்ததற்கேற்பவும் - இதோ அறப்போர் முரசின் ஒலி கேட்கத் தொடங்கி விட்டது. - - ஆங்காங்கு கழகத்தின் முன்னணி நிர்வாகிகள் அமைப்புகளின் செயல் வீரர்கள் - அணிகளின் ஆற்றல்மிகு தீரர்கள் எப்பக்கமிருந்து புகுந்து வரும் அடக்குமுறை; அது எத்தனை பட்டாளம் கூட்டி வரும் ? என விழிகளை வினாக் குறிகளாக்கிக் கொண்டு கனல் கொட்டி வரும் அதிகார வர்க்கத்தைக் கண்டு கலங்காமல்; கள மேவிடத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர் கழகக் கண்மணிகள். - ஆங்காங்கு அந்தப் பாசறை வீரர்களின் பட்டியல் தயாராகிறது நமது கழகம் ஈடுபடும் எந்தவொரு அறப்போராட்டத்திலும், ஒளிவு மறைவு என்பதோ, ரகசியத் திட்டம் தீட்டுவதோ கிடையாது. பெரியார் தலைமையில் களம் பல கண்ட போதும் அண்ணா தலைமையில் அறப்போர்களில் ஈடுபட்ட போதும் அவர்களின் வழி நின்று அமைதிப் பாதையே நாம் களம் செல்லும் பாதையாக அமைந்து வருகிறது. இப்போதும் அவ்வாறே அமையும், அமைய வேண்டும்.