பக்கம்:தி மு க திறந்த புத்தகம்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 அறிவிக்கப்பட்டுள்ள தமிழ் கட்டாயப் பாடம் என்ற அரசாணை குறித்து முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். புதுவை மாநிலத்தில் iஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்புவரை தமிழ் கட்டாயப் பாடம் என்று அறிவித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தத் தொடங்கி யிருக்கிறார்கள். இந்தச் செய்தியை அறிந்ததும் அதுபற்றிய முழு விவரமறிய புதுவை மாநில தி.மு.கழக அமைப்பாளர் தம்பி ஆர்.வி. ஜானகிராமன், புதுவை சட்டமன்ற உறுப்பினர் தம்பி எஸ்.பி. சிவக்குமார் ஆகியோரிடம் அந்த அரசாணையுடன் வருமாறு கூறியிருந்தேன். அந்த அரசாணை நகலையும், அறிமுகத் தமிழ்' என்ற புத்தகத்தையும் வாங்கிவந்து தந்துள்ளார்கள். இதற்கு முன்பே புதுவை மாநிலத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தமிழ் ஒரு பாடமாக பயிற்று விக்கப்படுகிறது. ஆனால் தமிழை முதல் மொழியாக எடுத்துக் கொள்ளாமல் வேறு மொழிகளை முதல் மொழியாக எடுத்துக் கொண்டு புதுவை, காரைக்கால் பகுதிகளில் பயிலும் மாணவர்களுக்கு இனிமேல் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயமாக கற்க வேண்டுமென்று புதுவை மாநில அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது. இந்த ஆணையையும் திட்டத்தையும் அங்கேயுள்ள தி.மு.க. உட்பட பல கட்சிகளும் பாராட்டியிருக்கின்றன. தமிழை முதல் மொழியாக எடுத்துக் கொள்ளாமல், வேறு மொழிகளை முதல் மொழியாக எடுத்துக் கொண்டு அங்கே பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டு ஒன்றுக்கு சுமார் 8 ஆயிரம் பேர்தான் இருக்குமென்றும், அவர்களும் தமிழைப் படிக்க இந்த ஆணை உதவும் என்றும் கூறப்படுகிறது.