பக்கம்:தி மு க திறந்த புத்தகம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 புதுவை அரசின் ஆணையிலே தமிழை கற்பது என்பது கட்டாயம் என்ற போதிலும் மாணவர்களின் தேர்வுக்கு இது எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என்று குறிப்பிட்டிருப்பது எந்த அளவிற்கு துணைபுரியுமென்ற ஐயப்பாட்டினைத் தோற்றுவிக்காமல் இல்லை. இந்த நிலையிலே தமிழகத்தில் உள்ள மொழிக் கொள்கை என்ன ? இங்கே என்ன நடைமுறை பின்பற்றப் படுகின்றது? தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பிலே இருந்தபோது என்ன செய்தது ? தற்போது ஆட்சிப் பொறுப்பிலே உள்ள அ.தி.மு.க. அரசு என்ன செய்தது? என்பதனை விளக்குவதற்காக சில கருத்துக்களை முன் வைத்திட விரும்புகிறேன். க கடந்த ஆண்டு 9-3-2002 அன்று தமிழக சட்டப் பேரவையில் அ.தி.மு.க. அரசின் சார்பில் ஆளுநரால் படிக்கப்பட்ட உரையில், "மாநிலத்திலுள்ள அனைத்துப் பள்ளி களிலும் பாடத் திட்டங்களில் தமிழ் மொழி ஒரு பாடமாகக் கற்பிக்கப்படுவது உறுதி செய்யப்படும்” என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின்மீது எந்த நடவடிக்கையும் அ.தி.மு.க. ஆட்சியாளர்களால் எடுக்கப்படாமலிருந்து 2003ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 21ஆம் நாள் ஓர் அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது. அந்த ஆணையில் பள்ளிகளில் அனைவரும் பயில