பக்கம்:தீபம் யுகம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 61 பா. கருத்து நயமும் சொல் வளமும் கற்பனை அழகும் செறிந்த கவிதைகளை எழுதினார். ஒரு சந்தர்ப்பத்தில் கவிதையிலேயே ஒரு பக்கம் தலையங்கம் தீட்டியிருந்தார். மணிவண்ணன், பொன்முடி, நவநீதகவி, செங்குளம் வீரசிங்கக் கவிராயர் என்று பல புனைபெயர் கள் பூண்டு விதம் விதமான கவிதைகளை இயற்றியுள்ளார் அவர். செங்குளம் கவிராயராக அவர் நையாண்டிக் கவிதைகள் எழுதினார். ஒவ்வொரு இதழிலும் இரண்டு மூன்று கவிதைகள் இடம் பெற் றன. மல்லியம் ராஜகோபால், இளங்கம்பன், சாலை இளந்திரையன், மின்னூர் சீனிவாசன், நெல்லை ஆ. கணபதி, நா.சீ.வரதராஜன் (பீஷ் மன்), பா.அமிழ்தன் முதலியவர்கள் மரபு வழியில் கவிதைகள் படைத்துள்ளனர். - புதுக்கவிதைக்கு ஆதரவு காட்டத் தொடங்கிய பிறகு, கவிதை கள் அதிகமாகவே இடம் பெற்றன. கடைசி சில வருடங்களில், இதழ் தோறும் கவிதைக்கு இடம் தாராளமாகத் தரப்பட்டுள்ளது. ஆரம்ப வருடங்களில் ஜெயகாந்தன் பல கவிதைகள் எழுதியுள் ளார். சிறுகதை எழுத்தாளரான ஆர். சூடாமணியின் கவிதை கூட தீபத்தில் பிரசுரமாயிருக்கிறது. பூமணியின் கவிதைகளும் வெளி வந்தன. புதுக்கவிதை எழுதுவதில் புக்ழ் பெற்ற பல கவிஞர்களின் கவி தைகளையும் தீபம் வெளியிட்டு வந்தது. ந. பிச்சமூர்த்தி, சுந்தர ராமசாமி, டி.கே. துரைஸ்வாமி (நகுலன்), ஞானக்கூத்தன், பரந்தா மன், வைத்தீஸ்வரன், கங்கை கொண்டான், சக்திக்கனல், புவியரசு, மு. மேத்தா, தமிழன்பன், மீரா - இப்படி அனைவரது கவிதைகளை யும் தீபம் பிரசுரித்தது. மு. மேத்தாவின் கவிதைகள் நல்ல கவனிப்பை யும் பாராட்டுதலையும் பெற்று வந்தன. புதிதாக எழுதத் துவங்கிய கவிஞர்களின் கவிதைகளைத்'தீபம்' அதிகமாகவே பிரசரித்து, மிகப் பலருக்கு ஆதரவு அளித்துக் கொண் டிருந்தது. புதுக்கவிதை விஷயத்தில் ஒரு புதுமையைச் செய்துள்ளது தீபம். ராமாவதார் தியாகி என்ற இந்திக் கவிஞர் எழுதிய ஒரு கவிதையை இளம் பாரதி தமிழாக்கினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/62&oldid=923258" இலிருந்து மீள்விக்கப்பட்டது