பக்கம்:தீபாவளி வரிசை.pdf/12

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

8

இரண்டாம் காட்சி

அதே இடம்

காலம்-சாயங்காலம்.

(படுக்கையின்மீது சண்முக முதலியார் படுத்துக் கொண்டிருக்கிறார். பர்வதம் அருகில் நின்று விசிறிக் கொண்டிருக்கிறாள்.)

ச. முருகா!-முருகா -இன்றைய பொழுதை நான் எப் படிக் கழிக்கப் போகிறேன் ! (பெருமூச்சு விடுகிறார்)

ப. அத்தான்! வருத்தப் படாதீர்கள். உங்கள் முருகன் எல்லாம் சரிப்படுத்தி விடுவார் !

ச. உம்! அவருக்கு எப்பொழுது மன மிரங்குமோ! - உம்.- சோமு எங்கே?

ப. அவனெ-கடைக்கு அனுப்பி யிருக்கறேன்.

ச. கடைக்கா ?-என்னத்திற்கு ?

ப. நாலு கதர் வேஷ்டிகள் வேண்டு மிண்ணீங்களே, அதெ வாங்கிவர. -

ச. ஏது பணம்-நாலு வேஷ்டிக்கு ?

ப. என் மீது கோபித்துக் கொள்ளாதீங்க, நான் வாஸ்த வத்தெ சொல்லிவிடரேன். நானு-இண்ணக்கி நம்ப ஊட்லே மூலே முடுக்கெ யெல்லாம் தேடிப் பாத்தேன்-அப்போ-நம்ப திருடன் தூக்கிகினு பூட்டா னிண்ணு நெனச்சோமே-அந்த உண்டி ஆப்பிட் டுது-அத்தெ-ஒடச்சி

ச. ஐயோ! அது திருத்தணிகை பிரார்த்தனை யுண்டி யாச்சுதே !

ப. ஆமாம் ! காலமே, திருவிளையாடல் புராணத்திலே நீங்க நேத்து குங்கிலியக் கலய நாயனர் இண்ணு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபாவளி_வரிசை.pdf/12&oldid=1415900" இலிருந்து மீள்விக்கப்பட்டது