19
9
ச. ரபர்வதம் என்னை அப்படியே பிடித்துக்கொள்!
(பர்வதம் அப்படியே செய்கிறாள்).
அண்ணாத்தெ! அண்ணாத்தே! ஓடிவாங்க ஓடி வாங்க அத்தான் தானா எழுத்து உக்காந்தாரு.
(திருமெஞ்ஞானம் சோமு, பாலசுந்தரம், முருகேசன் உள்ளே ஓடி வருகிறார்கள்.)
தி.தானா எழுந்து உட்கார்ந்தாரா !
ப. ஆமாம்! அப்புறம் என்னெ பிடிச்சுக்கொள்ளச் சொன்னாரு-அப்படியே புடிச்சி கிறேன்.
தி. நிரம்ப சந்தோஷம்!-அம்மா, நான் சொல்றபடி கேள். அவரை மெல்ல அப்படியே படுக்க வைப்போம். (இருவருமாக படுக்க வைக்கிறார்கள்.) அத்தான்! நான் சொல்வதைக் கேளுங்கள் ? இது பாரிச வாயு வல்ல-இதைப்பற்றி நான் படித்திருக்கிறேன். இது முதுகு தண்டை சேர்ந்த நரம்பின் வியாதி. இனி சீக்கிரமாகக் குணமாகி விடும். ஆயினும் நீங்கள் மறுபடியும் எழுந்து உட்காரப் பார்க்காதீர்கள் இப் பொழுது. இப்பொழுது என்னமணி-எட்டு? நாளை காலை எட்டு மணிக்கு சரியாக எழுத்து உட்கார வேண்டுமென்று தீர்மானித்து எழுந்து உட்காருங்கள்; அதுவரையில் வேண்டாம். இன்று சாயங்காலம் நான் பட்டணம் போய், என் சிநேகிதர் ஒருவர் சிறந்த வைத்தியர் இருக்கிறார்-சடகோப முதலியார், என்று அவரை அழைத்துக்கொண்டு வந்து காண்பிக்கிறேன் -அவர் எல்லாம் சொஸ் தப்படுத்தி விடுவார். முருகா! முருகா! அத்தான் !-நாங்கள் எல்லாம் தீபாவளிக்கு புது துணி உடுத்திக் கொண்டோமே, உங்களை நாங்கள் சேவித் துக்கொள்ள வேண்டாமா ? நான் முன்பு சேவித்துக் கொள்ளுகிறேன். (அப்படியே செய்கிறார்)
ச. திருமெஞ்ஞானம்- நீ என்னத்திற்கப்பா