பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளக்கக் குறிப்பு

ஒர் இரங்கற்பா

கனடா நாட்டின் விளையாட்டு வீரரான டெர்ரி போக்ஸ் புற்று நோயால் 22வயதில் தமது வலது காலை இழந்தார். புற்று நோய்த் தீவிர ஆராய்ச்சிக் காக 20லட்சம் டாலர் நிதி, திரட்ட ஒரு பெரு நடைத் திட்டத்தில் ஈடுபட்டார். கனடாவின் கிழக குக் கரையிலிருந்து மேற்குக் கரைக்கு, 5,300 மைல் தூரம் செயற்கை வலது காலுடன் நடந்து சென்று நிதி திரட்டுவதுதான் அத்திட்டம். ஆறுமாதத்தில் 3339 மைல் தூரம் தான் நடக்க அவரால் முடிந்தது. அதற்குள் புற்று நோய் அவர் நுரையீரலைப் பாதித்து வழியிலேயே இறந்து விட்டார். ஆனால் அவர் திரட் டிய நிதி 40லட்சம் டாலருக்குமேல் சேர்ந்துவிட்டது, இன்னும் குவிந்து கொண்டிருக்கிறது. 1977 இல் மறைந்த அவ்விளைஞரின் வீரச்செயல், மனித குலத் திற்காக ஆற்றிய மாபெரும் சாதனை.

உடைந்த குழல்

esturrir Lit (Leander-Hero of sestos) arci p cổg இளைஞன் நாள் தோறும் நள்ளிரவில் கிரேக்கக் கடலை (Helespond) நீந்திக் கடந்து, அக்கரையில் கன்னிமாடத்தில் இருந்த காதலியைச் சந்தித்து மீள் வது வழக்கம். பின்னர்க் கடவுளின் சாபத்தால் நடுக் கடலில்முழ்கி இறந்தான். உணர்ச்சிமிக்க காதலுக்கு இவன் தீரச் செயல் எடுத்துக் காட்டாக ஐரோப்பிய இலக்கியங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது. மகாகவி பைரன் கிரேக்க நாட்டுச் சுற்றுப் பயணத்தை மேற் கொண்ட போது, கிரேக்கக் கடற்கரையை அடைந் ததும் லியாண்டரின் நினைவு வந்து உணர்ச்சி வசப்பட்டுக் கடலில் குதித்துத் தன்னும் அதை நீந்திக் கடந்தான். -