பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு காமராசர் மேல்நிலைப் பள்ளியில் தலைமை யாசிரியராகப் பணியாற்றும் முருகு சுந்தரம் தமிழ் இலக்கிய,மேடைதோறும் தம் கவிதைகளை மெல்லிய பூங்காற்ருய் வீச வைத்த புதுமைக் கவிஞர். பாவேந்தர் 'குயிலி’லும் சுரதாவின் கவிதை இதழ் களிலும் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்ட முருகு கடைதிறப்பு’ என்னும் தொகுதி மூலம் கவிதையின் நல்லழகை எவரும் எளிதில் வசப்புதிம் வகையில் அறிமுகப் படுத் தியவர். பனித்துளிகள்’- தமிழக அரசின் பரிசுபெற்ற இவரது மற்ருெரு தொகுதி. பாவேந்தரின் பரம்பரையைச் சேர்ந்த இவர் பாவேந்தரைக் கண்டும் கேட்டும் அறிந்த நிகழ்ச்சிகளைப் பாவேந்தர் நினைவு களாக்கி யுள்ளார்.

'பாரதிதாசனைப்போல் எழுதுவது தான் என் முதற்குறிக்கோள். சுரதாவின் புதிய உத்திகள் இளங் கவிஞகிைய என்னைப் பெரிதும் வசீ கரித்ததுண்டு. இன்று - நான் நாளுக எழுது கிறேன்’ என்கிருர் முருகுசுந்தரம்.

இவரது முதல் புதுக்கவிதைத் தொகுதி

தீர்த்தக் கரையினிலே’