பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூக்க னேரிஏர்க்காட்டுக் காரருக்கு இலைமேல் பனித்துளி! கண்ணங் குறிச்சிக் காரருக்கோ பெரியகடல்:

அந்தத்

திரவப் பளிங்கில் திருவடிகளைத் தோயவிட்டு, தென்றலுக்குக் குலுங்கும் தேன்மலர்க் கொத்தாகக் குனிந்து நிமிரும் அக் கோலமயில் யார்? அவள்தான்.பூஞ்சோலை.

அவள்புறவிதழைக் கிழித்துப் புறப்ப்ட்டு வெளிவந்து அங்காந்த அகவிதழில் ஆசைத் தேனை நிரப்பிக் கொண்டிருப்பவள். வண்டு கோத வளர்கின்ற வாலிபம். திட்டமிட்ட மேனிக் கட்டளைக் கலித்துறை.

காலைக் கதிரில் அவள் பேரூர்ச்சிற்பம். அந்தி நிழலில் அவள் பிகாசோ ஓவியம்.

ஏகாலி நாகனுக்கு அவள் இரண்டாம் மனைவி. அவனுககு அவள் விடியல்: அவளுக்கு.?

அவன்... மங்கிய மாலைப் பொழுது:

10.