பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீண்டும் அந்த

மெலிதான இசை தென்றலில் மிதந்து வந்து அவள்'செவிப்பறையில் மோதியது.

அந்தக் காந்த இசை அவள் ஆவியில் கலந்து இரத்த நாளங்களில் பரவி மயிர்க் கால்களில் கொப்பளித்தது.

அவளுக்கு * இருககை கொள்ளவில்லை. எழுந்து வெளியில் ஓடிவந்தாள்.

உடம்பே காதாக எவ்வளவு நேரம் அவள் நின்றாளென்று அவளுக்கே தெரியாது. திடீரென்று அததேைைசநிேன்றது. திகைத்தாள் பூஞ்சோலை.

ஏன் நின்றது?,

ஏன் நின்றது?

என்று அவள் இதழ்கள் படபடத்தன. தயக்கத்தோடு தாள்கள் தரையைத்தடவ அவள் குடிசைக்குள்துழைந்தாள்.

U

அடுத்த நாள் அவள் அல்லி விழிகளை இமைக் கதவுகள் மூட மறுத்தன.

19