பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடம் பெயர்ந்து அதைந்து, எழுந்து நின்றது.

அவ்வுருவம்அடியெடுத்து _ வைக்கும் போதெல்லாம் ஆணியடிப்பது போன்ற ஒசை,

தண்ணிரால் நனைந்திருந்த பூஞ்சோலையின் உடம்பு வியர்வையால் நனையத்தொடங்கியது. வந்த வழியில் திரும்பி ஓடினாள்.

நின்ற அந்தக் காந்த இசை மீண்டும் எழுந்தது. அவள் நின்றாள். அந்த உருவம் அவளை நெருங்கியது. காற்றின் அசைவுக்குத் திரும்பும் மாந்தளிர் போல அவள் திரும்பினாள்.

எதிரில்...

ஒருகால் இழந்த

ஒரு காளை

காமத்துப் பாலின்

றள் வெண்பாப் போலப்

புன்சிரிப் போடு

நின்று கொண்டிருந்தான்.

"நீங்கள்...” என்று அவள் கேட்க

26