பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனது ஆற்றாமையை அவன் அப்படித்தான் மொழி பெயர்ப்பது வழக்கம்.

பூஞ்சோலை அன்று ஏரியைச் சற்று வேகமாகவே மிதந்து கடந்தாள்.

அன்று சுடா சறறுப பெரிதாகவே எரிந்தது. எண்ணெய் தீர்ந்து திரியும் பற்றி எரிந்து சாம்பலாக உதிர்ந்தது.

கொக்கி இருமலின் குரைப்புத் தாங்காமல் விழித் தெழுந்த நாகன் பக்கத்துப் பாயல் காலியாக இருப்பதைப் பார்த்தான். வெள்ளாவிப் பானைத் தெப்பத்தில் மிதந்து வந்த புள்ளி மானைக் கண்டான். வைக்கோல் போரில் பற்றிய தீயாக எழுந்தான் நாகன். பதற்றத்தோடு படம் விரித்த நாகன் சிறிது சிந்தனைக்குப்பின் படத்தைச் சுருக்கிக் கொண்டான்.

குடிசைக்குள் நுழைந்த இரவிவர்மாவின் நனைந்த ஒவியத்தைப் பார்த்து ‘என்ன இப்போது குளியல்’ என்று கேட்டான் அவன்.

29