பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்டுவலைக் காவடியில் பலாப்பழங்களை ஏற்றிக் கொண்டு பெளதீகத் தராசின் நடுத் தண்டைப்போல் நிமிர்ந்தபடி மலைச்சரிவில் நிற்காமல் ஓடிவரும் மலையாளியையும்

நிற்கும் மலை தன். காலடியில் கழற்றிவிட்ட செருப்பாக அடிவாரத்தில் காட்சிதரும் காப்பிக் கொட்டைத் தொழிற் சாலையையும்

மலைச் சாரல் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு வாடகையோடு திரும்பும் கல்லாங்குத்து முள்ளங்கிகளையும் மொபட் வண்டியில் கல்லூரி சென்று திரும்பும் ஐயர் வீட்டுப் பெண்ணின் ஆண்பிள்ளைத் தனத்தையும்

பூஞ்சோலை திருமணமான புதிதில் அகல விழிகளால் பார்த்துப் பொழுதைப் போக்கிய துண்டு.

இன்று அவையெல்லாம் சிறு பிள்ளைகள் சுவரில் கிறுக்கிய கரிக் கோடுகளாய் அவள் கண்ணில் பட்டன

31