பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீணையை விரல்தானே மீட்டும்? பாவேந்தன் வீனையே விரலாகி மீட்டிய தமிழ்வீணை.

அலிகள் அலங்கரித்த சுயம்வரத்தில், தமிழ்க்குமரி ஆராய்ந்து தேர்ந்தெடுத்த ஆண்மையுள்ள இளவரசன்.

தொட்டில்களைப் பிறைநிலவாய்த் தொங்கவிட்டுக் காட்டியவன்; கட்டில் அசைவில் கானல்வரி மீட்டியவன்; கல்லறை களையெல்லாம் தாஜ்மகால் ஆக்கியவன்.

சிறுநீரைப் போலச் சிந்திய கவிஞரிடைப் பெருநதியாய்த் தமிழ்வயலில் பெருக்கெடுத்து ஓடியவன். உதிரும் மலர்களை நாரால் பிணிக்காமல் மின்னல் கயிற்றால் விண்மீனைக் கட்டியவன்

காகிதத்தில் சீர்திருத்தக் கருத்தை எழுதாமல் சூட்டுக்கோலால் தமிழர் நெற்றியிலே எழுதியவன்.

சில கட்சித் தேவதைகளுக்கு இவன் பாடல்கள்

திருப்பள்ளி எழுச்சிகள்!

73