பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் பயணத்தின் முடிவைப் பற்றி நான் கவலைப் படவில்லை. நான் விழும் இடம்

சிப்பியின் வாயா... சிவந்த நெருப்புத் துண்டமா. தெரியாது.

என் நினைவின் தொடுவானம் சிந்தும் கடைசி நட்சத்திரங்கள் இவை. என் உடம்பாலும் உள்ளத்தாலும் உதிர்க்கின்ற பேச்சாலும் இராம பிரானையே நான் பூசித்து வந்தது உண்மையானால், மாதவன் மாதேவியான மண் மடந்தை என்னைத் தன்னுள் ஐக்கியமாக்கிக் கொள்ளட்டும்.

(சிதை வேள்விச் சாலையைவிட்டுத் தும்மலைப்போல் வெளியேறுகிறாள்;

§

§