பக்கம்:தீர்த்த யாத்திரை-கவிதைக் கதை.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'திரும்பும் வரையில் திசைகாட்டி யாக இருமென அவனை இருவரும் பணித்தனர்! காலை மாலே கடல்முழுக் காடியும், நூலணி குருக்கள் மந்திரம் நுவலக் கோயில் புகுந்து குறைமணம் காட்டியும், வாயிலில் உள்ள வறியோர்க் கீந்தும் சேய்பெற வேண்டி ஒவ்வொரு நாளும் மாயவன் இருக்கும் கோயிலைச் சுற்றினர் ! இரண்டொரு நாளில் வழிகாட்டி மீதோ இருவர்க்கும் நம்பிக்கை ஏற்பட்டு விட்டது ! 'சொல்லிலும், செயலிலும் நல்லவ னென்றே சொல்லினர்; எங்குந் துணைக்கழைத் தேகினர் ! காலையில் ஒருநாள் கடல்முழுக் காடச் சேலே எடுத்துச் சென்ருள் அவளும் துணைக்கு வழிகாட்டி தொடர்ந்து போனுன் ; மணற்கரை இருந்தான்! மங்கை குளித்தாள், ! தேய்ந்த நிலவு தெரிந்தது கடலில் ! பாய்ந்தவள் கடலுள் மூழ்கும் பாங்கினே எண்ணி எண்ணி ஏங்கினுன் இருந்தவன் 1 "வண்ணத் தாமரை மறிகடல் வந்ததோ ? வளர்மதி கடலுள் வந்து புகுந்ததோ ? குளம்வாழ் அன்னம் குதித்து வந்ததோ? என்றவன் மனத்துள் எண்ணி ஏங்கிளுன் ! கொன்ற தவள்விழி அழகும் கொன்றதே! நனந்த மயில்போல் நங்கை கரைவர முனைந்தாள் ; கரையை மோதும் பேரலை உருட்டிற் றவளே; ஓவெனக் கத்தினள் 4