பக்கம்:தீர்த்த யாத்திரை-கவிதைக் கதை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயல்வெளி சுற்றி வந்தனர் ஒருநாள் 1. கயல்கள் குட்டைக் கரையிற் பாய்ந்தன . பச்சைக் கடல்போற் பரந்த வயல்வெளி இச்சையைக் கிளற, இருவரும் தங்கள் முன்னர்த் தோன்றும் தென்னந் தோப்புச் சின்ன பாட்டையிற் செல்லத் தொடங்கினர் ! பாட்டை சென்று பசுமை தோய்ந்த - காட்டி னிடையிற் கலந்து கரைந்தது ! நோக்கும் திசையெலாம் புதரின் நுனியிற் பூக்கள் இன்பப் புதுமணம் வீசின ! கருங்குயில் தொலைவில் விருந்திசை அளித்தது : நெருங்கிய புதரிற் சிட்டுகள் நெருங்கின ! தென்றலும் மெல்லச் சிலுசிலுத் ததுவே ! அன்றலர் பூமேல் வண்டுகள் சென்றன ! இரண்டு புருக்கள் இணைந்து முத்திச் சுருண்டு விழுந்துபின் இன்பம் துய்த்தன! வழிகாட்டிக் காளையும் மங்கைநல் லாளும் விழியை அங்கிணை புருக்களின் மீதே கலந்தனர் அவரவர் கண்கள் கலந்தன !! கலந்தனர்! இன்பக் கடல்கலந் தனரே ! ஊருக்கு வந்த ஒன்பதாம் மாதம் சீரார் செல்வன், சிவந்த மேனியன் பிறந்தான்! இன்பம் பிறந்தது வாழ்வில்! உறவினர், ஊரார் தீர்த்த யாத்திரைப் பெருமையைப் பேசினர்! கேட்டாள் ; சிரித்தாள் வேறென்ன செப்பு வாளே !!