பக்கம்:தீர்த்த யாத்திரை-கவிதைக் கதை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடுக்களேயில் ஒர்நாள் அயர்ந்துறங்கும் போது, படுத்தணேத்(து) என்னைப் பசப்பிக்-கெடுத்தானே! யாரிடத்திற் போய்ச்சொல்வேன்? யாரென்னை நம்புவார்? ஊரின் நிலைமை உணர்ந்தேன்!-ஊரிற் கதவில்லா வீடுநான் ! காப்பில்லாத் தோப்பு ! முதலிரவு போலென்றும் வந்தான்;-விதவிதமாய்ப் பேசி மயக்கிப் பிரியேன்” எனச்சொல்லிக் காசும் பணமும் கொடுத்தே-ஊசற் குழம்பாக்கி விட்டுக் குடிகெடுத்தே என்னைப் பழம்பாயாய் ஆக்கிப் பலர்முன்-தொழுவினிலே இட்டுத் திருடி’ப் பெயரிட்டு வெளித்துரத்தி விட்டான்! விழித்தேன்நான்! தாயாக்கப்-பட்ட செயலே நான் யார்முன்னம் செப்புவது? செப்பின், அயலாரும் ஒப்புவரோ? ஏழை-பெயற்பெருக்கில் வீழ்ந்திறந்து சாவதல்லால், வேறமைதி உண்டாமோ ? வாழ்ந்திருக்க என்ன வழியுண்டாம்?-வீழ்ந்திறக்க விட்டுவிடு!" என்ருள்; மெல்ல எழுந்திருந்தாள் எட்டிக் கறுப்பன் இடைமறித்தான்:-மொட்டுப்போம் பல்வரிசைப் பெண்ணே ! பதருதே! உன்னுடைய தொல்லை உணர்ந்தேன்; துயர்துடைப்பேன்;-கொல்லைத் தினையுண்டு நாமுண்ணச்; சின்ன குடிசை மனேயுண்டு வாழ மகிழ்ந்தே ;-புனையாத ஓவியமாம் மக்கள் பலருண்டு; செந்தமிழின் காவியமாம் என்மனைவி காண்பாய்நீ;-தாவி வருங்குழந்தை உன்வயிற்றில் வந்து பிறந்தாற் பெருகுமின்பம்! வேறென்ன வேண்டும்?-இருவீட்டில்! 19