பக்கம்:தீர்த்த யாத்திரை-கவிதைக் கதை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்ருர் பலரும் ; தெருக்கதவு-நன்ருகத் தாழிட்ட பின்னர்த் தலைவர் வரலானர்: 'ஏழை மகளே என் சொற்கேள்!-வாழ வகைசெய்வேன் காண் நீ! வழிசொல்வேன் ' என்று நகைசெய் தருகில் நகர-வகையின் வழிகண்ட பெண்ணுள் மனம்நொந்து தப்ப விழிநீர் கலங்கி வெதும்பிப்-பழிகாரா! நன்மை நிலையத்தின் நன்மை இதுதானு? சொன்ன அறவிளக்கத் தூய்மையின்-தன்மை இதுவோ? பெரிய மனிதர் இயல்போ?. பொதுவாகப் புன்மையின் ஊற்ரும்-கதவைத் திறந்துவிடு இன்றேல் செயல்வேரும் என்ருள் "மறந்துவிடு தப்ப வழியோ ?-மறந்துவிடு ! செல்வப் பெருக்கம்,நற் சிங்கார வாழ்வு,சுகம் எல்லாம் உனக்கே !’ எனத்தாவிடமெல்லியளே எட்டி அணைக்க எழுந்தானே! நீளிரும்புச் சட்டம் கிடந்த(து) ! அதைத் தாவினுள் ;-எட்டி வருவான் தலைமேல் மனங்கொண்ட மட்டும். -*, > பெரும்போடு போடென்று போட்டாள்; தெருக்கதவைத் தாழ்நீக்கி ஒடிக் கறுப்பன் மனைவந்து - வீழ்ந்தாள் ; நிலைமை விளக்கினுள் !-சூழ்ந்த இருட்டிற் கொலச்செய்தி எங்கும் பரவிக் கருகிப் புகைநதது காண ! 13