பக்கம்:தீர்த்த யாத்திரை-கவிதைக் கதை.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றே கதையின் எடுப்பை எடுத்தார் ; *சின்ன வயதில், தெரியா உலகில் - நடந்ததை எவரும் நம்பியா வாழ்வார்? அத்தை மகள்தான் ! அதற்கோ இல்லச். சொத்தையும் புகழையும் துறந்திடக் கூடும்? வறுமையால் திருடிய மலர்விழிக் கன்னியை மறுபடி நினைத்தல் மடமை. ; இழிவாம் ! அருமை இனியனுக் கறிவே இல்லை ! திருமணம்’ என்ருல், செவியைப் பொத்துவான் ! ஒருபதில் இல்லை ! ஒருமகன் எனக்கே ! வந்தவன் நீயே வழிசெய வேண்டும் ! நொந்த தாயின் நோயைப் போக்க, இடித்துரை தம்பி எம்குடி வாழ ! படித்தவன் நீயும்; அவனும் படித்தவன் ! மற்றவர் போல வாழவேண் டாமோ ? பெற்ற வயிற்றிற் பேரிடி தேக்கி, வேண்டாம் என்றே வெறுத்துரைக் கின்ருன் ! ஆண்டியா நாமெலாம் ? அப்பன் சொத்து, வேண்டிய நன்செய், விளைபுலம் இருந்தும் ஒண்டியாய் வாழ்தல் உயர்வோ? சொல்லேன் ! நொண்டியோ, குருடோ நூலிடை யொருத்தியைக் கொண்டு, பலபொருள் கொண்டு வாழ்தல்' - பண்டை மரபு : பழந்தமிழ் வழக்கம் ! பணத்தில் மிகுந்த பாவையர் பலரும், குணத்திற் சிறந்த கொடியிடை பலரும், அழகிற் சிறந்த அணங்குகள் பலரும், வழவழப் பான மங்கையர் பலரும் காத்துக் கிடந்தும், கவலேயே இன்றி. மூத்துக் கிடக்கும் என்னேயே நம்பித் 2 1.7