பக்கம்:தீர்த்த யாத்திரை-கவிதைக் கதை.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'திருமண மென்றற், சீறிப்பாய் கின்ருன்! கல்லால் அடித்த கட்டையா என்னுடல் ? சொல்லேன் தம்பி! நீயவன் தோழன் ! அல்லும் பகலும் அவனது நினைவால் செல்லா தென்னுயிர் திரிகிற தென்றே இனியன் தாயார் எடுத்துரைத் திட்டார் ! இனியன் இதழில் இரண்டொரு தடவை சிரிப்பின் கீறல் தெரிந்து மறைந்ததே ! உண்ட இருவரும் அண்டை யறையில் பண்டைய கல்லூரிப் படுக்கை யறைபோல் பேசிச் சிரித்தே பிதற்றிட லானுர் ! அன்னை சொன்ன அறிவுரை யெல்லாம் பொன்னுெளி அறிவில் புதுமை தேக்க, 'என்ன ஆயினும் அன்னை அன்னேயே ! தன்னிக ரில்லாத் தமிழே தாயாம் !’ என்று பேச்சை எடுக்கத் தொடங்கிளுன் ! தோழா ! உன்னிடம் சொல்லவே இருந்தேன்! ஏழை அத்தை இனிய மகளவள். இளமை முதலே என்னே டிருந்தவள்; சிற்றுார்ப் பள்ளியிற் கற்றநாள் தொடங்கிப் பழகி வளர்ந்த பறவைகள் நாங்கள்; அழகுக் கேற்ற அருங்குண முடையாள்; கோடை விடுமுறை குளக்கரை யோரம் ஒடுவோம்; ஆடுவோம்; ஒளிப்புனல் நீந்துவோம்; பூத்த காட்டுப் புதரிடைப் புகுந்து - மலரைப் பறித்து மாலையாய்க் கட்டிக் கழுத்தி லிட்டுக் கடிமணம் என்று 18