பக்கம்:தீர்த்த யாத்திரை-கவிதைக் கதை.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூம்பும் பருவத்துக் கொக்கொத் திருந்தவன், ‘என்ன துயரோ?எடுத்துரைக்க வேண்டுமென்ருன்! *கன்னி கதைகேட்டாற் காரி உமிழ்வார் ! அருகிருக்கும் சிற்றுார்க் கருகிலுள்ள பேரூர் மருங்கிற் பலநாளாய் வாழ்ந்த பெருங்குடியில் தோன்றினேன்; என்ைேடு தோன்றினர் மூவராம்: மான்போல் இருதங்கை, மற்ருெருவன் தம்பி! புறந்தந்த என்னன்னே போற்றி வளர்த்தே அறந்தந்த ஐயன் கனிந்த பழங்கள்! "எதிர்வீட்டுச் சன்ன லிடையில் ஒருநாள் கதிர்காலை கண்டதுபோற் கண்டு மகிழ்ந்தேன்; புதியவர் ஊருக்குப் பொற்புடைய தோளர்; மதுமொழியர்; மாத்தமிழ் வல்லார்; இசைவல்லார்; கண்ணுக் கினியர்; கறுப்பழகர் ; யாழோடு பண்ணமைத்துப் பாடுவார்! பாய்ந்து வருமிசையிற சொக்கித் திளைத்ததுண்டு; தோளழகு கண்டதுண்டு! பக்கத்திற் பள்ளிப் பணியேற்று மாணவர்க்கே தீந்தமிழை ஒதும் செழுங்குணத்துச் செம்மலாம்! ஆய்ந்துரைக்கும் ஆற்றல் அறிவுச் சுடராம்! இலக்கியத்தின் மேதை! எழிற்கலையின் ஊற்று ! பலர்புகழும் பண்பினர் ! பாப்புனேயும் பாவலர்! ‘தென்றல் சிலிர்க்கும் சிறுகால ஆற்றேரம் நின்றிருந்தார் ; நானங்கே நீர்மொள்ளச் சென்றேன் ! 'நிறையழி கொல்யானே நீர்க்குவிட்டு) ஆங்குப் பறையறைந் தல்லது செல்லற்க என்னு இறையே தவறுடையான்' என என்னைக் குறைகூறி நெஞ்சக் குறிப்பை உணர்த்தினர் !. ஒன்று மறியாள்போல் ஒரக்கண் ணுற்பார்த்துச் சென்றேன்; எனதுமணம் சென்ற தவரூடே ! 24