பக்கம்:தீர்த்த யாத்திரை-கவிதைக் கதை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'வீட்டிலோ அன்னே விடியும் வரைஎன்றும் தீட்டாத அம்பொத்த சின்ன விழியைப் பொலிவாக்கி வந்த புதுவேல்போற் காட்டி நலிவாக்கி வந்தாள்! நறும்பூ வருவண்டை ‘வா'வெனச் செப்பல் வழக்கமோ ? மற்றதனைப் போ'வெனச் செப்பிடப் போமோ? இயற்கை ! நெளிந்தோடும் ஆற்றின் நெடுங்கரையில், தோப்பிற், குளிக்கும் துறையிற், குளிர்நீழற் காவில் தொடர்ந்து வரலானுர்; தோகைஎன் நெஞ்சிற் படர்ந்துவரும் காதற் பண்பை அறிந்தே நிலவொளியில் தோட்டத்தில் நின்றிருக்கும் போழ்து சிலேவிழியைப் பொத்தினர்; செந்தேன் அடையே ! கலையாத ஒவியமே! காட்சி விருந்தே! அலைமோதும் பேரூர் அழகுக் கடற்கரையே! வாழ வழிவகுப்போம் ; நீ இன்றேல் என்வாழ்க்கை பாழாகும்; பண்பில்லாப் பாட்டாகும்!” என்றே அனைத்து மகிழ்ந்தார்; அடிக்கடி எங்கள் இணைப்பு வளர இரவில் மரத்தடியில் வேய்வாழ் மலையில் விளையாட வேண்டு மெனப் பாய்ந்தார்! தடுத்தேன் ; பதருதீர்!" என்றுரைத்தேன “ஊரார் அறிய ஒளிவளேயைக் கைப்பிடிக்கும் சீரார் திருமணம் செய்தான பின்னரும் சும்மா இருப்போமோ? தோட்டக் கணியன்ருே அம்மா வருமோசை 1 ஆகட்டும் நாளே !” எனச்சொல்லிப் பன்னுள் இடைபோக்கி வந்தேன்; தினமும், உனேயன்றி வேருர் உளர்?' என்றே கொஞ்சி, மனம்குழப்பிக் கூருது கூறியே கெஞ்சி யிருந்தும் கிடைக்காத வேட்கையாற் 25