பக்கம்:தீர்த்த யாத்திரை-கவிதைக் கதை.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாய்ந்து புலிபோலப் பண்பைக் கெடுத்தானே ! தாயாகி விட்ட தகையுரைத்தேன்; அன்றுமுதற் போக்கெல்லாம் மாறிப் புதிய மனிதரின் நோக்குப்போல் என்னேயும் நோக்கி வரலார்ை ! “எத்தனையோ கெஞ்சியும் என்றன் குறைநீக்க ஒத்துவர வில்லையவர்; செத்து வரலானேன்! திங்கள் இருமூன்ருய்ச் செய்தி கிடைக்கவில்லை ! எங்கு மறைந்தானே? யாருண் டெனக்குரைக்க : அன்னை யறியாத சூலுண்டோ? அன்னையும் ஏன்னேக் குரைக்க இடிவிழுந்த கோட்டைபோல் தற்கொலைக்கே ஆளாளுர் ! தாயாரோ சுட்டெரித்தார் ! நிற்க நிழலில்லை! நீரன்றி ஊரெதற்கு? ‘மாலாம் இருதங்கை தம்பியும் வாழ, இல் வேலாய் இருக்க விரும்பாது சாகத் துணிந்தேன்! எனத்துயரம் சொல்லி எழுந்தாள் ! மணிப்புறவு போலெழுந்த மங்கை வழிமறித்து, 'வீட்டிற்குச் செல்வோம்! உயிரை விழலாக்கல் நாட்டிற்கே என்னும்? நட என்ருன்; பின்தொடர்ந்தாள் பாட்டை நெடுமரத்துப் பச்சைப் பசுங்காட்டுக் கூட்டுக் குயில்கள் குரல்கொடுக்கப், பூமணக்கக் காளே நடந்தான்; கருத்தே தொடர்வாள்வாழ் நாளே நினைத்தே நலிய மனம்வருந்தி, "இல்லுக்கா கட்டும்! இதிலென்ன தப்(பு) என்றே சொல்லாம லெண்ணித் துணி ந்து வரலாளுன் ; 26