பக்கம்:தீர்த்த யாத்திரை-கவிதைக் கதை.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. மன்னிப்பு நடுநிசியில் அவன்வந்தான் ; பிறன்தோள் மீது நடுங்குகின்ற அவளுருவைக் கண்டான் ; கையில் கொடுவாளே எடுத்துயிரைப் போக்க எண்ணிக் குறுக்கிட்டான் இருவரையும்! பறந்தான் கள்வன்! இநடுமாம்போல் அவன்காலில் வீழ்ந்து கெஞ்சி, “நினைத்துப்பார், பிள்ளை' யென்ருள்! கழுத்தைக்கத்தி தொடுநேரம் ஆண்டுவிட்டான் முன்தடுந்த தொந்தியினைக்; கலங்குகின்ருன்! மனித னன்ருே? கருக்கலைப்போல் தோன்றிற்று மண்ணில் யாவும் ! கால்விட்ட வழிநடந்து சென்றன்; ஆந்தை இருள்கிழிக்கும் குரல்கேட்டு நின்ருன்; பூத்த இலுப்பையிலே தலைமுட்டி அழுதான்; தோப்புச் சருகினிலே பாய்ந்தோடும் எலியைப் பர்த்துச், சண்ட்ாள் வஞ்சித்தாள் முறையோ என்ருன்; பெருமூச்சு விட்டங்கோர் மதகிற் குந்திப் பித்தனப்போல் ஏதேதோ பேசி ஞனே ! 28