பக்கம்:தீர்த்த யாத்திரை-கவிதைக் கதை.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலெல்லாம் அவளிடத்தில் கொட்டித் தந்து கண்ணற்று வாழ்ந்தேன்; கைம் மாறு பெற்றேன் ; மாதவியை ஒத்தவளென் றெண்ணி, அந்தோ! மயல்கொண்டிந் நாள்வரையில் இல்லம் பேணித் தீதின்றி வாழ்ந்துவந்தேன்; கண்ணில் மண்ணேத் திணித்திட்டாள் ; குற்றமிலா வயிற்றுப் பிள்ளே சாதலநான் எண்ணி, அவள் உயிரைத் தந்தேன் தப்பித்தாள்' எனத்தனக்குள் சொல்லிக் கொண்டான் ! மணிப்பொறியின் பெருமுள்ளேப் போல நாட்கள் மறைந்தோட அவளவனே நெருங்கி வந்தாள் ; துணிவற்றுக் கால்பணிந்து கெஞ்சிக் கெஞ்சித் தூயமனம் பெற்றுவிட்டேன்; பொறுப்பீர்! உங்கள் பணிபுரிவேன்! என்றுரைத்தாள்! தவறல் இந்தப் பாரினிலே உண் டென்று சொன்ன துள்ளம்.! மணல்நீராய்த் தெளிந்திட்ட உளத்தைக் கண்கள் வழிநீரில் கண்டுகொண்டான் ; மன்னித் தானே! 29