பக்கம்:தீர்த்த யாத்திரை-கவிதைக் கதை.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. புது மொட்டு ' குளிர்ந்த மாமரச் சோலேயிலே கூவும் குயில்தீம் பண்ணிசைத்து ! நளினம் சிரித்துத் தலையசைத்து நறுமணம் வாரி வழங்கிடவே வளியைக் கூவிப் பெருமிதமாய் வா! வா!' என்றே அழைத்திடுமால்! களிப்பில் திளைத்துத் தோகைமயில் கார்முகில் கண்டு அசைந்தாடும் ! ஊற்றுக் கல்லிடைப் புகுந்தோடி ஒடும் குதிரை வாய்நுரைபோல் காற்றுச் சுவைத்த மலரோடு - கரையா நுரையாய் மினுமினுக்குந் தோற்றங் கண்டு மீனினங்கள் துள்ளும் நாணற் கரைமீது ! மாற்ற மில்லாக் காதலொடு மந்தி தாவும் ஆணுேடு! 33