பக்கம்:தீர்த்த யாத்திரை-கவிதைக் கதை.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்குக் கழுத்துப் பெண்ணினங்கள் சதங்கை காலில் ஒலியெழுப்ப நுங்கு மேற்ருேல் உடற்கைகள் நொடித்து விழியால் மயக்கிஆண் அங்கத் திடையே மின்சார அலேக ளெழுப்பிக் காமவெறி பொங்க இளமுலே அசைந்தாடப் புதுப்புது முறையில் நடம்புரிவர் !

  • மனமும் ஏனே எனேச்சூழும் மட்டில் இன்பப் பெருக்கதிலே கனிவு காண இசைவில்லை! கண்மணி யசோதரை எனதில்லாள் நினைவிற் கசப்பாய் உருவானுள் ! நில்லா தோடும் என்மனத்தின் வினையை மாற்ற நகர்சுற்ற விரும்பினன்' என்ருன் சித்தார்த்தன்!

சித்தன் ஆவான் சித்தார்த்தன் ! சிறிதும் என்சொற் பொய்க்காதே! அத்தா உண்மை’ என்ருெருநாள் அறைந்த நிமித்திகன் சொல்நினேவிற் குத்திக் காட்டச் சுத்தோதன். ' குழந்தாய்! நாளேப் போ வென்றன்; உத்தர விட்டான, நகாககழங்கள் - உறைவிட மொடுங்கிக் கிடந்திடவே! 33