பக்கம்:தீர்த்த யாத்திரை-கவிதைக் கதை.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேற்றிற் புதைத்த அரசிலபோற் சிறுபகையற்று நார்த்தோலாய்க் காற்றில் வீழும் எலும்புடலாய்க் கடந்தான் அவ்வழி ஓர்முதியோன் ! நேற்றே அறைந்த அரசாணை நினைவி லோம்பாக் கிழப்பிணத்தைக் கூற்றுவ னுலகிற் கனுப்பிடவே குதித்தே எழுந்தனர் காவலர்கள் ! கிழத்தைக் கண்டான் சித்தார்த்தன். கிட்டி நடந்தான் அதனருகில் பழுத்த தலைகால் உடல்முழுதும் பார்த்தான் உள்ளப் பரிவோடு 1 'கொழுத்த உடலும் இளவெழிலும் குன்ரு தென்றும் அழியாக்கல் எழுத்தைப் போலே நிலைநிறுத்த என்னு"லாமோ ? எனநினைந்தான் ! சித்தார்த் தன்மன எண்ணமெலாம். சிரங்கு கிள்ளும் கைபோலே இத்தரை இன்னல் வாழ்வினிலே எழுந்து தோன்றி விரைந்தோடிச் சுத்தித் திரிந்து மனத்துள்ளே சுடர்விழி காட்டும் பெருவாழ்வின் புத்தம் புதுமலர் மொட்டொனறைப் புவியனுக் களிக்க முனைந்ததுவே! 34