பக்கம்:தீர்த்த யாத்திரை-கவிதைக் கதை.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. வேலையில்லாத் திண்டாட்டம் ! வானிற் செம்மை வளர்ந்து மலிந்து காணுறு போலக் காட்சி யளித்தது! செம்மேட்டு வெள்ளத் தேக்கம் போலவும், அம்மேட்டு மருங்கு வயல்வெளி போலவும், செங்கடல் திரையெலாம் சீறிப் பாய்ந்து பொங்கி மோதும் புதுமை போலவும் சிந்திய சுடரொளி சிரிப்பால் அழைக்கும்! அந்தி வான அழகு முகில்கள் புந்தியை மயக்கின! புதுப்புது ஒவியம் தந்து மறையும் செந்தித் தொடுவான் இடையில்! மலையின் இடையில் பரிதி உடைந்த தட்டென ஒளிமங்கியதே! கடற்கரை யோரம் காற்ருட வந்த நடைபயில் நிலவுகள் நகரக் கன்னியர் ! இடையில், இடையில் எழிலோ டிறுக்கிய உடையில், உடலில், ஒளிசேர் விழியில், கடற்கரை மணலிற், கரைதவழ் அலேயில் படரும் இருளொடு படரும் செம்மை ! செக்கர் சிந்திய செவ்வொளிச் சிறுசுடர் இக்கரை காட்டும் எழில்மது மாந்தி இருந்தான் இளைஞன்! மனம்அங்கில்லே! 37