பக்கம்:தீர்த்த யாத்திரை-கவிதைக் கதை.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருவெளி வானப் பிறையும் மீனும் பூந்தாழை மடலும் பித்தளைப் பொடியுமாம்! சீந்துவாரற்றுக் கிடப்பதைப் போலக் கிடந்தான் ; சோர்ந்து கிடந்தான் இளைஞன் ! படர்ந்தோடி யாடும் பைங்கிளிச் சிருரும், பின்னல் அசையப் பேசிச் சிரிக்கும் கன்னல் மொழியார் கடைக்கண் தேனும், எங்கோ அலறும் வானெலி இசையும், பொங்கு கடலின் புதுத்தமிழ்ப் பாட்டும் வெறுப்ப்ே தந்தன விரிவான் பரப்புக் கறுத்தது மெல்லக் காரிருள் படர்ந்ததே ! எழுந்தான்; நடந்தான்; ஏதேதோ எண்ணினன்; தொழுநோய்ப் பசியின் தொல்லே தாங்காது : காற்ருடு வோர்முன் கையை நீட்ட ஆற்ரு கிை அமர்ந்தான் ஓர்பால்! வறுமையா தெரியும் வயிற்றுப் பசிக்கு? "பொறுமையாய் இரு வெனப் புகன்ருற் கேட்குமா? ஒருநாளன்று; இருநாள் பட்டினி . பொருளும் இல்லை ; புகலிடம் இல்லை! ஏங்கித் தவித்தான்; எதிர்ப்படு வார்முன் தாங்காப் பசியின் தகைமை கூறினன் ! பரிகசச் சிரிப்பே பரிசாய்க் கிடைத்தது! எரியும் வயிற்றை யிறுக்கவா முடியும்? நின்றன் ; ஏங்கின்ை; நீள்மூச் செறிந்தான் ! சென்று திருடெனச் செப்பிய துள்ளம் 'நன்றன் றிச்செயல்' என்றது நுழைபுலம்! நின்ருன்! பசியே வென்றது! தொலைவில் 38