பக்கம்:தீர்த்த யாத்திரை-கவிதைக் கதை.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருவான் ஒருவனின் வழியினேப் பார்த்துத் தெருவின் முடக்கில் இருளில் மறைந்து சுண்டெலி தொடரும் பூனேயைப் போல ஒண்டி இருந்தான் ஒதுக்கிடம் பார்த்தே ! திருடன் திருடன் !-சுவரெதிரொலித்ததே! அருகில் வாழ்நர், அங்குள மக்கள் * ஒருவ ரேனும் உடன்வர வில்லை! தெருவில் நிகழும் சிறுசண் டைக்கும் வருவதும், பார்ப்பதும் வாடிக்கை யில்லே : பட்டின வீரப் பண்பிப் பண்பாம்! பட்டினம் பார்க்க வந்தவன், திருடனே எட்டிப் பிடித்தே இரண்டறை கொடுத்தே கையும் களவுமாய்க் காரிருள் இல்லா மைய விளக்கின் மருங்கில் வந்தான்! இருவரும் விளக்கில் ஒருவரை யொருவர் அருகிற் பார்த்தனர் 1 அப்பா சாமியா ?” என்ருன் வந்தவன்! இருவரும் திகைத்தனர்! பொன்ன ! என்ன மன்னித்து விடடா! என்நிலை வறுமை ! என்செய் கோநான்? ஒன்றிய நட்போ டுயர்நிலைப் பள்ளியிற் படித்து முடித்தோம்; பட்டம் பெற்ருேம் ! நடுத்தரக் குடும்ப நலிவைப் போக்க அலைந்தேன்; பட்டினம் முழுமையும் அலைந்தேன் ! தொலைந்தது கைப்பொருள் தோழா !” என்றே நடந்ததை அப்பா சாமி நவின்ருன்! அடங்காப் பசிவந் தவர்களே அலேக்கச் சென்றனர் இருவரும் சிற்று ணருந்த ! 39