பக்கம்:தீர்த்த யாத்திரை-கவிதைக் கதை.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழியாற் கட்டிய கண்கவர் இல்லம் எழிலுடன் தனித்தே இருக்கக் கண்டனர்! தினக்கதிர்ச் சுமைகள் சிதறிக் கிடந்தன! நனை இருல் பிழிவும், நற்பலாச் சுளேயும் மூலையில் ஓர்பால் ஒலேயிற் கிடந்தன ! வேலே முடித்து விறகு சுமந்து சிறுமி ஒருத்தி தேனடை சுவைத்தே உறுமு புலிபோல் உட்புகக் கண்டனர் ! அந்தி மயக்கிய அடிவான் தோற்றம் சிந்திய குருதிச் செருக்களம் ஒக்கும் ! வீட்டைச் சுற்றி வெளிப்புறக் குழியில் காட்டு விறகுக் கட்டவிழ்த் திட்டாள் ; முன்றில் நெருப்பு மூட்டிச் சிறுமி அன்றைய உணவை ஆக்கத் தொடங்கினுள் ! தானத் தல்வனும், தன்னுடன் வந்த ஏனைய மறவரும் இல்முன்வந்து, "குழந்தாய்! அஞ்சேல்! குடிநீர் கொடுப்பாய் ! இழந்தோம் வழியை இவ்விடம் வந்தோம் மலைவழி மாறி மாறிச் செல்வதால் .. அலேந்தோம் ; திரிந்தோம் ! அயலூர் செல்ல எவ்வழி ? காட்டென எடுத்தனர் ப்ேச்சை! 'இவ்வழி செலலாம்' என்றனள் சிறுமி ! இருளும் மெல்ல எழுந்தது கீழ்வான்! மருளும் விழியால் மறவரைச் சிறுமி, பார்த்துப் பார்த்துப் படம்பிடித் தெடுத்தாள் ‘யாவிர் நீர்? எவ்வூர்?’ என்று வினவினுள் ! போர்புரி மறவர் புதரில் மறைந்தே ஊரை மீட்பதாய் உளறும் கயவரைத் 45