பக்கம்:தீர்த்த யாத்திரை-கவிதைக் கதை.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. கொலைகாரன்


سمسَم تمہیب ہے.

வியப்பொடு மக்கள் மெல்ல மெல்ல வழக்கறி மன்றம் வந்து சேர்ந்தனர்! கொலையைப் பற்றிக் கூருர் இல்லை.! மன்றத் துள்ளும், வெளியிலும் மக்கள் நின்றும் குந்தியும் நெடுமூச் செறிந்தும் கொன்ற இளைஞனைப் பழித்துக் கூறினர்! மன்ற மணியும் வாயிலில் ஒலித்தது! வெளியும் உள்ளும் வீரரின் காவல்! வழக்கறி மக்கள் வந்து சூழ்ந்தனர் ! மன்றத் தலைவர் இருக்கையில் இருக்கச் சிப்பாய் இருவர் சிறையிருந் தொருவனே விலங்கிட் டழைத்து மெல்ல வந்தனர்! அழகிய தோற்றம்; அகன்ற நெற்றி, சுருண்டு படிந்த துளய தலைமுடி : சிரித்த உதடு ; சிந்தனைக் கண்கள் ; குழிவிழு கன்னம் ; குளிர்ந்த நோக்கு ; எறும்புச் சிறுதொடர் அரும்பு மீசை; கட்டுடற் காளை கைதியின் கூண்டில் தலையைத் தாழ்த்திய சிலபோல் நின்ருன்! மன்றத் தலைவர் கைதியைப் பார்த்துக் 'கொலேயின் காரணம் கூ"றெனக் கேட்டார்! 48