பக்கம்:தீர்த்த யாத்திரை-கவிதைக் கதை.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேன்மை தங்கிய மன்றத் தலைவரே ! நானே கொலைஞன் ! நானே கொன்றேன்! சிறையோ, தூக்கோ, சித்திர வதையோ எதையும் இன்பமாய் ஏற்க வந்துளேன். தீர்ப்பை வழங்குவீர்; ஏற்பேன்! என்றே கைதி சிறிதும் கலக்க மின்றி - உரைத்தான்; கூண்டின் ஒருபால் இருந்தான் ! "பன்முறை காரணம் பகரக் கேட்டும் இன்னும் காரணம் இயம்பா திருத்தல் நன்றல; இன்றே தீர்ப்பின் இறுதிநாள்! நீயோ படித்தவன்; பட்டமும் பெற்றவன் ; சீரிய பண்பும், கூரிய அறிவும் - உடையவன் என்றே உணர்ந்துளேன்! அதனல் உற்ற காரணம் உரை"என மீண்டும் மன்றத் தலைவர் வலிந்து கூறினர் ! மன்றம் நிறைந்த மக்களே எல்லாம் கைதியின் கண்கள் பார்த்தன ; கலங்கின : 'தலைவரே ! என்கதை சாற்றுவேன். கேட்பீர்! பிறந்தேன்; பிறந்தஎட் டாண்டு கழித்துத் தந்தை வெளியூர் தகுபொருள் தேடச் சென்றவர் திரும்பி வரவே இல்லை! ஏழைத் தாயோ என்னை வளர்க்கக் கூலிக் குழைத்தாள் ; கொடுமைகள் பொறுத்தாள் வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டி என்னை வளர்க்க ஏதேதோ செய்தாள்; சிற்றுார்ப் பள்ளியிற் சேர்த்தாள் பிடித்தேன்! பள்ளியிற் படிக்கப் பணம்வேண் டாமா? அன்னே பகலிர வழுதுருக் குலைந்தாள் ; 4 49.